ஆட்டோ -VIP வாகன அணி விபத்து இருவர் படுகாயம் .
புடடல வில் உள்ள மஹாகோத்யாய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற ஆட்டோ -VIP வாகன அணி விபத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ளார்கள்.
வெல்லவாயவில் இருந்து மொனராகலை நோக்கி சென்ற ஆட்டோ ஒன்று எதிர் திசையில் வந்த முக்கிய பிரமுகர் ஒருவரின் வாகன அணியுடன் விபத்துக்குள்ளானதில் ஆட்டோவில் சென்ற இருவர் பலத்த காயம் அடைந்துள்ளார்கள். இந்த விபத்தின் போது ஆட்டோ ஆனது வாகன அணியில் வந்த கார் ஒன்றுடனும் டிபெண்டெர் ரக வாகனம் ஒன்றுடனும் மோதி நொறுங்கியுள்ளது . காயமடைந்த ஆட்டோ சாரதியும் , பயணியும் புட்டல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். வாகன விபத்தில் ஈடுபட்ட வாகனங்கள் அனைத்தும் போலீஸ் நிலையத்துக்கு எடுத்து செல்லப்பட்ட போதிலும் VIP வாகனங்களின் இலக்கத்தகடு அகற்றப்பட்டுள்ளதாக அறியவருகின்றது