Sat. May 16th, 2026

ஆட்டோ விபத்துக்குள்ளானதில்  8வயதுச் சிறுவன் இளம் தந்தை இருவரும் பலி

ஆட்டோ விபத்துக்குள்ளானதில்  8 வயதுச் சிறுவன் மற்றும் இளம் தந்தை ஆகிய  இருவரும் பலியாகியுள்ளார்கள்.

நேற்றிரவு பதுளை  எல்ல கபரகல பிரதேசத்தில் ஆட்டோ விபத்துக்குள்ளானதில் 35 வயதான இளம் தந்தையும் 8 வயதுச் சிறுவன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் 12 மற்றும் 8 வயதுடைய இரு மகன்கள் படுகாயம் அடைந்த நிலையில் பதுளை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்றிரவு பதுளையிலிருந்து பிட்டபொல பகுதியை நோக்கி பயணித்த ஆட்டோ வேகக் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 350 மீற்ரர் உயரத்தில் இருந்து விழுந்து விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed