ஆட்டோவிற்குள் இருந்து கேரள கஞ்சா மீட்பு!! -காரைநகரில் சம்பவம்-
யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இணைந்து நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையில் 2.16 கிலோகிராம் கேரள கஞ்சா போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான முச்சக்கரவண்டி ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய போது இந்த கேரள கஞ்சா போதைப் பொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தகவல் தெரிவித்துள்ளது.
இருப்பினும் குறித்த கேரள கஞ்சா போதைப் பொருளை சட்டவிரோதமான முறையில் கடத்திச் சென்ற சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, முச்சக்கரவண்டி மற்றும் கேரள கஞ்சா தொகை மேலதிக விசாரணைகளுக்காக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.