ஆட்சி அதிகாரத்தில் இருக்கவே சுதந்திர கட்சி கூட்டணி பேச்சுவார்த்தையில், போட்டுடைத்தார் சந்திரிகா

ஜனாதிபதி வேட்பாளராக இலங்கை சுதந்திர கட்சி, ஒருவரை நியமிப்பதாக இருந்தால் அது கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லதாக அமையும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்
அத்தனகலவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் குறிப்பிட்டார்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாமல் போனாலும் கூட எதிர்வரும் காலங்களில் கட்சியை வெற்றிபெறச்செய்யவதற்கும் , கட்சியின் வாக்குகளை தொடர்ந்து பேணி பாதுகாத்துக் கொள்ளவும் தனியான வேட்பாளர் அவசியம் என்றும் அவர் கூறினார் . ஆனால் கட்சியின் தலைமை சில விடயங்களில் தனித்து தீர்மானம் எடுக்கின்றது என்றும் மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் நோக்குடனேயே பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் குற்றம்சுமத்தினார் . அவ்வாறான நடவடிக்கைகள் எனது தனிப்பட்ட கொள்கைக்கு பொருந்தாது என்றும், இதனால் அவ்வாறான கலந்துரையாடல்களில் நான் ஒருபோதும் பங்குபற்ற போவதில்லை என்றும் சந்திரிகா கூறினார்.