ஆசிய மட்ட கூடைப்பந்தாட்ட போட்டிக்கு யாழ் பல்கலைக்கழக பெண்கள் அணி

7வது ஆசிய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆசிய மட்ட 3×3 கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிக்கு யாழ் பல்கலைக்கழக பெண்கள் அணி தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான 7வது ஆசிய மட்ட3×3 சுற்றுப் போட்டி எதிர்வரும் 23ம் திகதி முதல் 25ம் திகதி வரை சீனாவில் நடைபெறவுள்ளது.
இதில் யாழ் பல்கலைக்கழக அணி சார்பில் வீராங்கனைகளாக
அணித்தலைவியாக விதுஷா,
கே.தமிழரசி,
பி.ஜாணுகா ஆகியோரும் அணி முகாமையாளராக யாழ் பல்கலைக்கழக உடற்கல்வி போதனாசிரியர்

செல்வி. இராதை அருளம்பலம் ஆகியோரும் செல்லவுள்ளனர்.
இச்சுற்றுப் போட்டிக்கு இலங்கையில் இருந்து பெண்கள் பிரிவில் யாழ் பல்கலைக்கழக அணி மற்றும் கொழுப்பு பல்கலைக்கழக அணியும், ஆண்கள் பிரிவில் கொழுப்பு பல்கலைக்கழக அணி மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழக அணியும் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களிலும் இவ்வாறான போட்டிகளில் யாழ் பல்கலைக்கழக அணி பங்குபற்றியமை பெருமைக்குரிய விடயம் ஆகும்.