Mon. May 18th, 2026

ஆசியா நாடுகளுக்கான போட்டியில் யாழ் வீரர் ரமணன் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் கைப்பற்றி சாதனை

ஆசியா நாடுகளுக்கு இடையிலான ஆசியா மாஸ்டர் மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்த யாழ் வீரர் ரமணன் ஒரு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
ஆசியா நாடுகளுக்கு இடையிலான 23 வது ஆசிய மாஸ்டர் மெய்வல்லுநர் போட்டி இந்தியாவில் கடந்த 5 தொடக்கம் 10 ம் திகதி வரை நடைபெற்று வருகிறது. இதில் 50 வயதுப் பிரிவினருக்கான போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்த யாழ் வீரர் செல்வராஜா ரமணன் உயரம் பாய்தலில் தங்கப் பதக்கத்தையும்
முப்பாச்சல் மற்றும் கோலூன்றிப் பாய்தலில் போட்டிகளில் வெள்ளி பதக்கங்களையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இவர் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியின் பழைய மாணவன் ஆவார் .
மேற்படி போட்டியில் 22 ஆசிய நாடுகளை சேர்ந்த 3000இற்கும் மேற்பட்ட வீர்கள் பங்கு பற்றியிருந்தனர் இலங்கையில் இருந்து 250 வீரவீரங்கனைகள் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிட்டதக்கது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed