ஆசியாவின் 8 நகரங்கள் முதல் 10 இடங்களில்-அதிக வாழ்க்கைச்செலவில்
உலகின் அதிக வாழ்க்கைச்செலவை கொண்ட நகரங்களின் பட்டியலில் ஆசியாவின் 8 நகரங்கள் முதல் 10 இடங்களில் இடம்பிடுத்துள்ளன. கடந்த காலங்களில் அநேகமான இடங்களை ஐரோப்பா மற்றும் வடஅமெரிக்கா நகரங்களே பிடித்திருந்தன . ஹாங் காங் தொடர்ந்து 2 ஆவது தடவையாக முதல் இடம் பிடித்துள்ளது
மெர்ஸர்ஸ் 2019 குளோபல் டாலேண்ட் ட்ரென்ட்ஸ் அறிக்கையில் இந்தவிடயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் டோக்கியோ 2 ஆவது இடத்தையும் சிங்கப்பூர் அதற்கு அடுத்த இடத்தையும் பிடித்துள்ளன. யாரும் எதிர்பாக்காத விதமாக மத்திய ஆசியா நாடான துர்க்மெனிஸ்தானின் அஸ்ஹகாபட் 10 ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
இந்த தரப்படுத்தலானது பல்வேறு பட்ட விடயங்களை கருத்தில் கொண்டே நாடுகளை தரவரிசை படுத்தியுள்ளது. நாணய மதிப்பு மற்றம் மற்றும் நாணய மதிப்பிழப்பு, அத்தியாவசிய பொருட்கள்
மற்றும் வீட்டு விலையேற்றம், வெளிநாட்டு வேலையாட்களுக்கு கொடுக்கப்படும் சம்பள அளவு போன்றவற்றை கணக்கிலெடுத்தே இந்த தரவரிசை மேற்கொள்ளப்பட்டடது.
சுவிற்சர்லாந்தின் சூரிச் நகரமும் அமெரிக்காவின் நியூ யார்க் நகரமும் முதல் 10 க்குள் வந்த ஆசியாவுக்கு வெளியே உள்ள நகரங்களாகும். இவை முறையே 5 ஆம் மற்றும் 9 ஆம் இடங்களை பிடித்துள்ளன.
இந்தியாவின் மும்பாய் 67 ஆவது இடத்திலும் சென்னை 154 ஆவது இடத்திலும் கொழும்பு 182 ஆவது இடத்திலும் வரிசை படுத்தப்பட்டுள்ளது