அ.புவிதரன் கோலூன்றி பாய்தலில் தங்கம்
இளநிலை பிரிவினருக்கான தேசிய மட்ட கோலூன்றி பாய்தலில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த அ.புவிதரன் தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.
இளநிலை பிரிவினருக்கான 57வது தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.
இன்று நடைபெற்ற 20 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான கோலூன்றி பாய்தலில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த அ.புவிதரன் 4.40 மீற்ரர் உயரப் பாய்ந்து தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.