அவன்காட் மிதக்கும் ஆயுத களஞ்சிய வழக்கில் இருந்து கோத்தபாய உட்பட 8 பேரும் விடுதலை-மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி
அவன்காட் மெரிடைம் சேர்விஸ் நிறுவனத்திற்கு காலி துறைமுகத்தில் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையை அமைத்து நடத்துவதற்கு அனுமதி வழங்கியமை மூலம் அரசாங்கத்திற்கு 11.4 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி லஞ்ச ஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழு தாக்கல் செய்திருந்த வழக்கின் பிரதிவாதியான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவையும் மற்றும் குற்றம் சுமத்தப்பட்ட ஏனைய 7 பிரதிவாதிகளையும் விடுதலை செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம், கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது. லஞ்ச ஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழுவுக்கு இந்த வழக்கை கொண்டுநடத்துவதற்கான முகாந்திரம் இல்லை நேரும் இந்த தீப்பில் குறிப்பிட பட்டுள்ளது