அவசர அழைப்பு விடுத்த ரணில்!! -அலரி மாளிகைக்கு விரையும் தலைவர்கள்-

நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய முன்னணியினைச் சேர்ந்த அனைத்து கட்சி தலைவர்களையும், அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர்களையும் இன்று வெள்ளிக்கிழமை அலரி மாளிகைக்கு அவசரமாக வரும்படி அறிவுறுத்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை குறித்த இறுதித் தீர்மானம் இச் சந்திப்பின் போது எட்டப்படும் என்று நம்பப்படுகின்றது.
ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை நியமிக்கும் படி ஐக்கிய தேசியக் கட்சியின் 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு மீண்டும் ஒரு கடிதத்தை பிரதமரிடம் ஒப்படைக்க உள்ளதாக அறிவிக்கப்படுகிறது.