அவசரகால சட்டம் அடுத்தவாரம் நீக்கம்

இலங்கையில் உதிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அமுலில் உள்ள அவசர கால சட்டம் வரும் வாரம் நீக்கப்படும் என்று தான் நப்புவதாக உல்லாசபயணத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.
இலஙகை தற்பொழுது மிகவும் பாதுகாப்பான இடமாக மாறியுள்ளதாகவும் இதனை இலங்கை படையினர் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்த அவர், இந்த அவசரகால சட்டமே துரதிஷ்டவசமாக அமுலில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த அவசர கால சட்டம் நீக்கும் பட்சத்தில் , அதிகமான அளவில் உல்லாசப்பயணிகள் வந்திறங்குவார்கள் என்றும், இந்த அவசர கால சட்டம் அவர்களின் காப்புறுதியை பெறுவதில் உள்ள சிக்கலை இல்லாமல் செய்து விடும் என்று மேலும் கூறினார்