Sat. Apr 11th, 2026

அழகியல்பாட செயன்முறைப் பரீட்சாத்திகளுக்கான அறிவித்தல்

2022(2023) ஆண்டிற்கான க.பொ.த. சாதாரண பரீட்சையின் அழகியல்பாட செயன்முறைப் பரீட்சைகள் 2023.08.02 ஆம் திகதி தொடக்கம் 2023.08.12 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள பரீட்சைக் குழுக்களில் இடம்பெறும்.
சங்கீதம் (கீழைத்தேய), சங்கீதம் (மேலைத்தேய), சங்கீதம் (கர்நாடகம்),
நடனம் (சுதேச), நடனம் (பரதம்), நாடகமும் அரங்கியலும் (சிங்களம்), நாடகமும் அரங்கியலும் (தமிழ்), நாடகமும் அரங்கியலும் (ஆங்கிலம்) போன்ற பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சையே நடைபெறவுள்ளது. இதில்
சங்கீதம் (மேலைத்தேய) பாடத்தின் கேட்டற் பரீட்சை 2023.08.06 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் எனவும், கடந்த வருடத்தைப் போன்றே செய்முறைப் பரீட்சை மதிப்பீட்டு முறைகளில்
எவ்வித மாற்றமும் இல்லாததுடன் இம்முறையும் அம்முறைமையே பின்பற்றப்படும். அத்துடன்
பாடசாலைப் பரீட்சார்த்திகள், தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன இது தொடர்பாக ஏதேனும் விசாரணைகள் இருப்பின் 1911 தொலைபேசி இலக்கங்களுடாக தொடர்பு கொள்ள முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏன்.ஏ.எம்.சி.அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed