Sun. Apr 12th, 2026

அளவெட்டி மத்தி அணி வொலிபோலில் வெற்றி வாகை சூடியது

நாயன்மார்கட்டு பாரதி விளையாட்டு கழகம் யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட B தர அணிகளுக்கான கரப்பந்தாட்ட சுற்றுபோட்டியில் அளவெட்டி மத்தி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

நாயன்மார்கட்டு பாரதி விளையாட்டு கழகம் யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட B தர அணிகளுக்கான கரப்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டம் நேற்று  ஞாயிற்றுக்கிழமை குறித்த கழக மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்றது.

இதன் இறுதியாட்டத்தில் அளவெட்டி மத்தி அணியை எதிர்த்து அச்சுவேலி கலைமகள் அணி மோதியது. இதில் அளவெட்டி மத்தி அணி 3:2 என்ற செற்கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

போட்டியின் சிறந்த வீரராக அளவெட்டி மத்தி அணி வீரர் லக்சன் தெரிவுசெய்யபட்டார்.

 

About The Author

Share This:

Leave a Reply

You may have missed