கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட கோலூன்றி பாய்தலில் அளவெட்டி அருணோதயக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த பி.தனுசங்கவி தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
கனிஸ்ட பிரிவினருக்கான 57 தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் இன்றும் நாளையும் நாளை மறுதினமும் கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.
இன்று நடைபெற்ற 18 வயதிற்குட்பட்ட பெண்களிற்கான கோலூன்றி பாய்தலில் அளவெட்டி அருணோதயக் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த பி.தனுசங்கவி 2.90 மீற்ரர் உயரப் பாய்ந்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.