Fri. Jun 21st, 2024

அளவெட்டியில் விபத்து இரு பிள்ளைகளின் தந்தை பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை சம்பவிடத்தில் பலி ; அளவெட்டியில் துயரம் !

அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளம் குடும்பஸ்தர் மின் கம்பத்துடன் மோதிய விபத்தில்
சம்பவிடத்தில் உயிரிழந்துள்ளார்

இச் சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலை 4:00மணியளவில் அளவெட்டிப் பகுதியில் இடம் பெற்றுள்ளது .

இச் சம்பவத்தில் அளவெட்டி பகுதியைச் சேர்ந்த தியாகராஜா தயா வயது 36 என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

இன்று பிற்பகல் மழை பெய்து கொண்டிருந்த வேளை வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் விபத்திற்கு உள்ளாகியதாக தெரிய வந்துள்ளது.

உடலம் உடற்கூற்று சோதனைக்காக தெல்லிப்பழைஆதாரவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்