அல்வாய் கிழக்கு சின்னத்தம்பி பாடசாலை பின் வீதியில் (காராளவளவு) உள்ள வெள்ள வாய்க்கால் பொது மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு உடனடியாக புனரமைப்பு
அல்வாய் கிழக்கு சின்னத்தம்பி பாடசாலை பின் வீதியில் (காராளவளவு) உள்ள வெள்ள வாய்க்கால் பொது மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு உடனடியாக புனரமைப்பு செய்யப்பட்டது.

அல்வாய் கிழக்கு சின்னத்தம்பி பாடசாலை பின் வீதி
வீதியில் உள்ள வெள்ள வாய்க்கால் புல்லும் செடியுமாக இருப்பதினால் தண்ணீர் தேங்கி நிற்பதுடன் மாலை சந்தை விநாயகர் ஆலய வருடாந்த உற்சவத்தின் வேட்டை திருவிழாவுக்கு இவ்வீதி ஊடாக விநாயகர் வேட்டையாடுவதற்கு வருவதாகவும் இதனால் வாய்க்காலை புனரமைப்பு செய்து தருமாறு

அல்வாய் 6ம் வட்டார மக்களால் மக்கள் பிரதிநிதி
தர்மலிங்கம் வெள்ளிருவை நிமலன் அவர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் குமாரசாமி சுரேந்திரன் அவர்களின் மேற்பார்வையில் வெள்ள வாய்க்கால் துப்பரவு செய்யப்பட்டது.