Sat. Dec 7th, 2024

அறநெறி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு

முல்லைத்தீவு மாவட்ட இந்து சமய அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கும்  முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்து சமய அறநெறிக் கல்வியை அபிவிருத்தி செய்தல் தொடர்பான விசேட கலந்துரையாடலும் இன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில்  மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில்  முல்லைத்தீவு மாவட்ட இந்து சமய அறநெறிக் கல்வி அபிவிருத்திப்பேரவை உருவாக்கம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் பேரவையும் உருவாக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அனிருத்தனன் , பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் லிங்கேஸ்வரன், பிரதம கணக்காளர்  ம.செல்வரட்ணம், இந்து கலாசார அபிவிருத்தி  உத்தியோகத்தர்கள், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து  இந்து சமய அறநெறிப் பாடசாலைகளின் பொறுப்பாசிரியர்களும் ஆசிரியர்கள்  எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்