அறநெறிக் கல்வியை மேம்படுத்தும் நிகழ்வு

அல்வாய் சாமணந்தறை ஆலடி பிள்ளையார் ஆலயத்தின் அறநெறிப் பாடசாலை அறநெறிக் கல்வியை மேம்படுத்தும் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.15 மணியளவில் குறித்த ஆலய முன்றலில் நடைபெறவுள்ளது.
குறித்த ஆலயத்தின் தலைவர் வி.செந்தூரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக இந்து போக பேரின்ப பரிகார சங்க பொருளாளர் சிங்கபாகு சிவகுமார் அவர்களும் சிறப்பு விருந்தினராக கோப்பாய் ஆசிரிய பயிற்சி கலாசாலை விரிவுரையாளர் வேல் நந்தகுமார் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.