அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை கொடியேற்றம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க வடமராட்சி துன்னாலை அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை 14ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 21ம் திகதி குருக்கட்டு விநாயகர் தரிசனம் 22 ம் திகதி வெண்ணை உற்சவம் 23ம் திகதி துகில் உற்சவம், 24ம் திகதி பாம்புத் திருவிழா, 25ம் திகதி கம்சன் போர், 26ம் திகதி வேட்டைத் திருவிழா, 27ம் திகதி சப்பறத் திருவிழா, 28ம் திகதி தேர்த் திருவிழா, 29ம் திகதி சமுத்திர திருவிழா, 30ம் திகதி பட்டுத் தீர்த்தமும் பிற்பகல் கொடியிறக்கமும் இடம் பெறும்.