அருணோதயா பிறீமியர் லீக் அருணோதயா றோயல் அணி 66 ஓட்டங்களால் அபார வெற்றி

அருணோதயா பிறீமியர் லீக் கிண்ணத்திற்கான கிரிக்கெட் தொடரில் அருணோதயா றோயல் அணி 66 ஓட்டங்களால் அபாரமான வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர்.
அருணோதயா பிறீமியர் லீக் கிண்ணத்திற்கான கிரிக்கெட் தொடரின் இறுதியாட்டம் அண்மையில் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்றது. இதன் இறுதியாட்டத்தில் அருணோதயா றோயல் அணியை எதிர்த்து அருணோதயா றிஸ்சிங் ஸ்ரார் அணி மோதியது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அருணோதயா றோயல் அணி 10 ஓவர்கள் நினைவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 138 ஓட்டங்களை பெற்றனர்.
அவ்வணி சார்பில்
செல்வின்லொயிட் 65 ஓட்டங்களையும்,
தயேஸ்குமார் 49 ஓட்டங்களையும் பெற்றனர். அருணோதயா றிஸ்சிங் ஸ்ரார் அணி சார்பில் ஹரிகிருஸ்ணா ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றிஸ்சிங் ஸ்ரார் அணி 10 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 72 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 66 ஓட்டங்களால் தோல்வியடைந்து. அவ்வணி சார்பில் ஹரிகிருஸ்ணா ஆட்டம் இழக்காமல் 39 ஓட்டங்களையும்,
திசோக்காந் 15 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் அருணோதயா றோயல் அணி சார்பில் பிரதாப் விக்கெட்டுகளையும், கிருபன், வரன், செல்வின் ஆகியோர் ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
நிலைய தலைவர் க.கமலரூபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ் மாநகரசபை ஆணையாளர் சந்திரன் கிருஸ்னேந்திரன் அவர்களும் கெளரவ விருந்தினர்களாக அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய தலைவர் சி.ஆறுமுகதாசன், அரியாலை திருமகள் சனசமூக நிலைய விளையாட்டு தலைவர் ப.லோகநாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.