அரியாலை சரஸ்வதியின் நூற்றாண்டு விழா கிண்ணம் ஆவரங்கால் இந்து இளைஞர் அணி வசம்

அரியாலை சரஸ்வதி சன சமூக நிலையத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட யாழ் மாவட்ட அணிகளுக்கிடையிலான கரப்பந்தாட்டப் போட்டியில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணி சம்பியனாகியது.
இதன் இறுதியாட்டம் நேற்று குறித்த கழக மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணியை எதிர்த்து புத்தூர் கலைமதி அணி மோதியது. 5 செற்கள் கொண்ட போட்டியில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணி 25:19, 25:23, 25:16 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சம்பியனாகியது.