அரியாலை சன சமூக நிலையம் சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடாத்திய உள்ளூர் சனசமூக நிலையங்களுக்கு இடையிலான கரபந்தாட்ட போட்டியில் அரியாலை சன சமூக நிலையம் சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.
இதன் இறுதியாட்டம் நேற்று இரவு மின்னொளியில் நடைபெற்றது. இறுதியாட்டத்தில் அரியாலை சன சமூக நிலையம் அணியை எதிர்த்து திருமகள் சன சமூக நிலைய அணி மோதியது.
3 செற்களைக் கொண்ட போட்டியில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் முகமாக விளையாடினர்.
இருப்பினும் அரியாலை சன சமூக நிலைய அணி 25:22, 25:23 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றினர்.