Thu. May 21st, 2026

அரச நிறுவனங்களுக்கு இராணுவத்தினர் மற்றும் காவல்துறை புலனாய்வு பிரிவின், கையூட்டல் நடவடிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை

இராணுவத்தினர் மற்றும் காவல்துறை புலனாய்வு பிரிவின் அதிகாரிகளை அரசாங்க நிறுவனங்களுக்கு அனுப்புதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
போக்குவரத்து சேவை முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார். அரச சேவைகளை பெற்றுக்கொள்ள வரும் பொது மக்களிடம் கையூட்டல் பெறும் இடைதரகர்களை கைது செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் 137 அரச நிறுவனங்களில் விசேட கடமைகளுக்காக பயன்படுத்தப்பட்டிருந்த சிவில் பாதுகாப்பு அதிகாரிளை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய அடுத்த மாதம் இறுதியில் இருந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரியர் அத்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்

About The Author

Share This:

Leave a Reply

You may have missed