Mon. Oct 7th, 2024

அரச உத்தியோகஸ்தரின் வீட்டை நொருக்கிய கும்பல்!! -பொற்பதி வீதியில் சற்றுமுன் சம்பவம்-

யாழ்.கொக்குவில் பொற்பதி பகுதியில் உள்ள அரச உத்தியோகஸ்தர் ஒருவருடைய வீட்டிற்குள் புகுந்த இனந்தெரியாத கும்பல் அங்கிருந்த பொருட்களை அடித்து நொருக்கி நாவ வேலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது.


இன்று இரவு 9.30 மணியளவில் நடைபெற்ற இச் சம்பவம் நடந்துள்ளது.

பொற்பதி வீதியில் முலாம் ஆம் ஒழுங்கையில் அரச உத்தியோகஸ்தருடைய கும்பத்தினர் வசிக்கும் வீட்டிற்குள் 2 மோட்டார் சைக்கிலில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்துள்ளது.


அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து சிறிது நேரம் நின்று நாச வேலை செய்த கும்பல் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இச் சம்பவத்தில் வீட்டில் இருந்த எவருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை.

இச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்