அரச உத்தியோகத்தர்களுக்கான வலைப்பந்தாட்டம் யாழ்மாவட்ட செயலக அரச உத்தியோகத்தர் அணி சாதிப்பு
அரச உத்தியோகத்தர்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியில் யாழ்மாவட்ட செயலக அரச உத்தியோகத்தர் அணியினர் சாதனை படைத்து சம்பியன் கிண்ணங்களைச் சுவீகரித்துள்ளனர்.
அரச உத்தியோகத்தர்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டிகள் பண்டாரவளை விளையாட்டு மைதானத்தில் கடந்த 11ம் திகதி தொடக்கம் 13வரை நடைப்பெற்றது.
இதில் சி பிரிவினருக்கான போட்டியில் யாழ் மாவட்ட அரச உத்தியோகத்தர்
வலைப்பந்தாட்ட அணி விலகல் முறையில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் போட்டியில் ரெயில்வே தினைக்களத்துடன் மோதி தமது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளனர்.
அத்துடன் சுழற்சி முறையில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் லேபர் தினைக்களத்துடன் மோதி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளனர். 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நடைபெற்ற போட்டியில் யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட அணி ரெயில்வே தினைக்களத்துடன் மோதி சம்பியன் பெற்றுள்ளது.
மற்றும் 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான கலப்பு அணி என்பவற்கான போட்டியில் யாழ் மாவட்ட அரச உத்தியோகத்தர்கள் அணி கொழும்பு பொலிஸ் அணியுடன் மோதி இரண்டாம் இடம் பெற்றுள்ளது.