Thu. Jan 23rd, 2025

அரச  அதிபர் வெற்றிக் கிண்ணத்தை பருத்தித்துறை பிரதேச செயலகம் வசம்

யாழ்ப்பாண மாவட்ட  அரச  அதிபர் வெற்றிக் கிண்ணத்தை பருத்தித்துறை பிரதேச செயலகம் பெற்றுக் கொண்டது.
யாழ்மாவட்ட அரச அதிபர் கிண்ணத்திற்கான போட்டிகளின் இறுதிநாளுக்குரிய நிகழ்வு நேற்று மாவட்ட செயலக பிரதித்திட்டமிடல் பணிப்பாளரும், நலன்புரி சங்க தலைவருமான திரு.இ.சுரேந்திரநாதன் தலைமையில் வேலணை துறையூர் ஐயனார் கழக விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
யாழ்மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலககங்கள் பங்குபற்றிய குறித்த போட்டியில் ஒ‌ட்டுமொ‌த்த புள்ளிகளின் அடிப்படையில் பருத்தித்துறை பிரதேச செயலகம் 61 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும், தெல்லிப்பளை பிரதேச செயலகம் 47 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும், கரவெட்டி பிரதேச செயலகம் 41 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்விற்கு  முதன்மை விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபரும், நலன்புரி சங்க போசகருமான அம்பலவாணர் சிவபாலசுந்தரன், சிறப்பு விருந்தினர்களாக மேலதிக அரசாங்க அதிபரும் உபபோசகருமான மருதலிங்கம் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர்  (காணி) கனகராஜா  ஸ்ரீமோகனன் மற்றும் கௌரவ விருந்தினராக வேலணை பிரதேச செயலாளர் கயிலாசபிள்ளை சிவகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்