அரச அதிபர் வலைப்பந்தாட்டம் – தெல்லிப்பளை பிரதேச செயலகம் வசம்
யாழ்மாவட்ட அரச அதிபர் கிண்ணத்திற்கான வலைப்பந்தாட்ட போட்டியில் தெல்லிப்பளை பிரதேச செயலக அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
யாழ்மாவட்ட அரச அதிபர் கிண்ணத்திற்கான வலைப்பந்தாட்ட போட்டியின் இறுதியாட்டம் நேற்று மபுதன்கிழமை வேலணை ஐயனார் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாடாடத்தில் தெல்லிப்பளை பிரதேச செயலக அணியை எதிர்த்து வேலணை பிரதேச செயலக அணி மோதியது. ஆட்டம் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய தெல்லிப்பளை பிரதேச செயலக அணி 21.11 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.