அரச அதிபர் கிண்ண கால்பந்தாட்டம் – பருத்தித்துறை பிரதேச செயலக அணி சம்பியன்
யாழ்மாவட்ட அரச அதிபர் வெற்றிக் கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரில் பருத்தித்துறை பிரதேச செயலக அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
இதன் இறுதியாட்டம் நேற்று வேலணை ஐயனார் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் பருத்தித்துறை பிரதேச செயலக அணியை எதிர்த்து வேலணை பிரதேச செயலக அணி மோதியது.
முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்களல்ல என்பதனை நிரூபிக்கும் முகமாக விளையாடினர்.
இருப்பினும் பருத்தித்துறை பிரதேச செயலக அணி வீரர் கிருபா தனது அணிக்கான முதலாவது கோலைப் பதிவு செய்ய முதல் பாதியாட்டத்தில் பருத்தித்துறை பிரதேச செயலக அணி 1:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர்.
இரண்டாவது பாதியாட்டதிலும் இரு அணிகளும் சம பலத்துடன் மோதினர். இருப்பினும் பருத்தித்துறை பிரதேச செயலக அணி வீரர் திருமாறன் ஒரு கோலைப் பதிவு செய்ய வெற்றியை உறுதிப்படுத்தும் முகமாக கிருபா மீண்டும் ஒரு கோலைப் பதிவு செய்ய ஆட்ட நேர முடிவில் பருத்தித்துறை பிரதேச செயலக அணி 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.