அரசியல் சூழ்சிகளுக்குள் அகப்படாமல் ஒரே நாடு என்ற கோஷத்துடன் கைகோக்குமாறு வடகிழக்கு இளைஞர்களிடம் கோத்தபாய கோரிக்கை
அரசியல் சூழ்சிகளுக்குள் அகப்படாமல் எங்களுடன் இணைந்து ஒரே நாடு என்ற கோஷத்துடன் முன்னோக்கி செல்வதற்கு கைகோக்குமாறு வடகிழக்கு இளைஞர்களிடம் கோரிக்கை விடுத்தார் பொதுஜன பெரமுன கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச.
நேற்று கொழும்பு தாமரை தடாக அரங்கில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் இளைஞர் முன்னணியின் தேசிய மாநாட்டில் பேசும்பொழுதே இந்த கோரிக்கையை அவர் விடுத்தார்.
ஏனைய பகுதிகளுக்கு வழங்கும் அணைத்து அபிவிருத்தி பணிகளும் வடகிழக்கு பகுதிகளுக்கும் வழங்கப்படும் என்றும் கூறினார்.
தேசிய பாதுகாப்பை உறுதி செய்யாமல் நாட்டின் பொருளாதாரத்தை ஒருபொழுதும் கட்டி எழுப்பமுடியாது. இந்த அரசாங்கம் ஆடசிக்கு வந்தபின்னர் தேசிய பாதுகாப்புக்கு எந்த முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை . நாட்டின் ஆடசியாளர்களுக்கு பாதுகாப்பு தொடர்பான போதிய அறிவு இல்லை. நாட்டின் புலனாய்வு துறையை மீளக்கட்டி எழுப்ப வேண்டிய தேவை எழுந்துள்ளது.
இந்த ஆடசியாளர்களால் நல்லாட்சி மற்றும் ஜனநாயகம் என்ற பாதங்கள் தெரிவுபடுத்தப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
மேலும் கூறிய அவர் தங்களின் ஆட்சியின் கீழ் ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்களுக்கு மதிப்பளிக்கப்டும் என்றும் ஊடக சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரம் என்பன உறுதிப்படுத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்