அரசமரம் தறிப்பதற்கு அனுமதி வழங்கா விட்டால் பெளத்த விகாரையும் அமைக்கப்படலாம்

அரசமரம் தறிப்பதற்கு மக்கள் அனுமதி விட்டால் பெளத்த விகாரையும் அமைக்கப்படலாம் .
வீதி புனரமைப்பு வேலையில் இடையூறாக இருக்கும் அரச மரத்தை தறிப்பதற்கு அப்பகுதி மக்கள் அனுமதி வழங்கியுள்ளனர். இல்லையென்றால் இன்னும் சிறிது காலத்தில் இந்த பகுதியிலும் பெளத்த விகாரை அமைக்படலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
புலோலி கொடிகாமம் வீதி (AB – 31) வீதி தற்போது புனரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதில் வீதியை அகலமாக்கும் இடத்தில் அரச மரம் இடையூறாக இருந்துள்ளது. சிலர் மரம் தறிப்பதற்கு இடையூறு விளைவித்த போது அதனை விளங்கப்படுத்துவதற்கான கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டம் முறாவில் பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் வீதி அபிவிருத்தி மேற்பார்வையாளர் குழுத்தலைவர் தர்மகுலசிங்கம், பொறியியலாளர் என்.தயாபரன், பொறியியலாளர் திருமதி கூல் , நிறைவேற்று அதிகார சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தற்போது இக் கூட்டத்தில் மரம் தறிப்பதற்கு அனைத்து மக்களும் அனுமதி வழங்கியுள்ளனர். ஆனால் இந்த மரத்தை தறிப்பதற்கு சில அரசியல்வாதிகள் மற்றும் சில அதிகாரிகள் விரும்பவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதில் அரச மரம் இருந்தால் இன்னும் சிறிது காலத்தில் இந்த பகுதியிலும் பெளத்த விகாரை உருவாகக் கூடும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே வீதி அகலிப்பதற்கு இடையூறாக இருக்கும் மரத்தை தறிப்பதற்கு உரியவர்கள் அனுமதி வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக மேற்பார்வையாளர் தர்மகுலசிங்கம் கருத்து தெரிவிக்கையில் அகலிப்பு வேலை அடுத்த வருடம் நவம்பர் மாதம் முடிக்க வேண்டும். ஆனால் இதனை ஒரு வருட காலத்திற்குள் முடிப்பதற்கு தாம் முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.