அம்பாறையில் வெற்று காணியில் இருந்து வெடிபொருட்டுகள் மீட்பு

சம்மாந்துறையில் உள்ள சம்புமடு என்ற பிரதேசத்தில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
இன்று ஞாயிற்றுக்கிழமை (15) மதியம் சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து அப்பிரதேசத்தில் உள்ள கல்குவாரிக்கு அருகே உள்ள வெற்று காணி ஒன்றில் புதைக்கப்பட்ட நிலையில் இருந்த அமோனியா ஜெலக்னைட் வெடிபொருள் குச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை மீட்டுள்ளார்கள்.
இந்த சம்பவம தொடர்பாக சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதக்கவும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்