அமெரிக்காவில் பயங்கரம் ; துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலி 21 பேர் காயம்
அமெரிக்கா நேரப்படி பிற்பகல் 3:37 மணியளவில் இந்த சம்பவம் டெக்சாஸ் மாகாணத்தில் இடம்பெற்றது. தாக்குதலில் 30 வயதுகளில் உள்ள ஒரு வெள்ளையின ஆண் என்று போயில்சர் தெரிவிக்கிறார்கள்.
தாக்குதலாளியின் வாகனத்தை போக்குவரத்து கண்காணிப்புக்காக நிறுத்தியபொழுது அவர் அந்த பாதுகாப்பு அதிகாரியை முதலில் சுட்டதாகவும் பின்னர் வாகனத்தை ஓடிக்கொண்டே போலீஸ் அதிகாரி உட்பட பலபேரை சுட்டதாகவும் தெரியவருகின்றது. பின்னர் தனது வாகனத்தை கைவிட்ட துப்பாக்கிதாரி, வேறுஒரு வாகனத்தை கடத்திக்கொண்டு தொடர்ந்தும் துப்பாக்கியால் சுட்டவாறே சென்றதாகவும் தெரியவருகின்றது. மக்கள் அதிகம் கூடுகின்ற ஷாப்பிங் மோல் பகுதிகளில் தாக்குதலை மேற்கொண்டதனால் அதிக உயிரழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்ட்தாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதலாளியை பின்தொடர்ந்து சென்ற பொலிஸாருக்கும் தாக்குதலுக்கும் இடையில் துப்பாக்கி சண்டை சினிமா திரையரங்கு பகுதியில் இடம்பெற்று வருவதாக கடைசியாக பொலிஸார் வெளியிட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலில் 2 வயது குழந்தை உட்பட 5 பேர் கொல்லப்படும் 21 பேர் காயமைடைந்தும் உள்ளனர்
தாக்குதல் சம்பவத்தின் காணொளியும் இணைக்கப்பட்டுள்ளது
Just witnessed a shooting in Odessa, Texas. #breakingnews
Posted by Alex Woods on Saturday, August 31, 2019