Mon. Aug 10th, 2026

அமரர். பஸ்ரியாம்பிள்ளை வெற்றிக்கிண்ணம் ஐக்கிய அணி வசம்

மடு மாந்தை மேற்கு உதைபந்தாட்ட லீக்கினால் நடாத்தப்பட்ட அமரர். பஸ்ரியாம்பிள்ளை ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரில் ஐக்கிய விளையாட்டு கழக அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

அணிக்கு ஒன்பது பேர் கொண்ட குறித்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் 13 அணிகள் கலந்து கொண்டது.
இறுதியாட்டத்தில் விடத்தல்தீவு
ஐக்கிய  அணியினை எதிர்த்து ஆண்டான்குளம் சென் தோமஸ் அணி மோதியது.
முதல் பாதி ஆட்டம் இரு அணிகளுக்கும் சவாலாக அமைந்த போதிலும் ஐக்கிய அணி வீரர் வி. வின்சன் பற்றிக் தனது அணிக்கான முதலாவது கோலினை பதிவு செய்தார். இதனால் முதல் பாதியாட்டத்தில் ஐக்கிய அணி 1:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர்.
இரண்டாவது பாதியாட்டத்தில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்களல்ல என்பதனை நிரூபிக்கும் முகமாக விளையாடினர். இருப்பினும் ஐக்கிய அணி வீரர்
D. டெலக்ஷன் ஒரு  கோலினை பதிவு செய்ய ஆட்டமுடிவில் விடத்தல்தீவு ஐக்கிய அணி 2:0 என்ற கோல் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர். இப்போட்டியில் அமரர்.பஸ்ரியாம்பிள்ளை
அவர்களின் பாரியார் மற்றும் புதல்வர் கலந்து கொண்டதோடு லீக் செயலாளர் ஒகஸ்ரின், போட்டிக்குழு தலைவர் ஜெபா ஆகியோர் நெறிப்படுத்தியிருந்தனர். வெற்றியீட்டிய அணிகளுக்கு வெற்றிக் கேடயங்களும் பணப்பராசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed