அபிவிருத்தி உத்தியோகத்தரின் அர்ப்பணிப்பான அரச சேவைக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக செயற்பட்ட வடமாகாண அரச அதிகாரிகள் மீது ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ள வேண்டும் – தீபன் திலீசன்
அரச நிதியைப் பயன்படுத்தி கூட்டப்பட்ட கூட்டமொன்றில், அபிவிருத்தி உத்தியோகத்தரின் அர்ப்பணிப்பான அரச சேவைக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக செயற்பட்ட வடமாகாண அரச அதிகாரிகளின் செயற்பாட்டை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ஆ. தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்
அதிகாரக் கதிரையில் உட்கார்ந்திருந்து, மக்களது பிரச்சினைகளுக்கும் அரச நிர்வாக கட்டமைப்பின் முறைகேடுகளுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண வேண்டியிருக்கும் நிலையில்,
அத்தகைய பிரச்சினைகளை தீர்க்கமுடியாதவர்கள் பலர் கூடி, தமது கடைமையையும் தகுதியையும் மீளாய்வு செய்யவேண்டிய நிலையில், அதற்கு கூட திறனற்றவர்களாக,
அபிவிருத்தி உத்தியோகத்தரின் சேவையை களங்கப்படுத்தும் விதமாக செயற்பட்டமை வன்மையான கண்டனத்துக்குரிய விடயமாகும்.
அரச நிதியைப் பயன்படுத்தி கூட்டப்பட்ட கூட்டமொன்றில்,
அபிவிருத்தி உத்தியோகத்தரின் அர்ப்பணிப்பான
அரச சேவைக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக கருத்து வெளியிட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் ஒழுக்காற்று விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.