Sat. Nov 2nd, 2024

அபார ஆட்டத்தால் ஆவரங்கால் மத்தி அணி சம்பியன்

கைதடி தெற்கு சன சமூக நிலையத்தின் 64வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கைதடி முத்துமாரி அம்மன் மரக்காலை நிறுவன உரிமையாளர் செ.பஞ்சலிங்கம் அவர்களின் அனுசரணையில் நடைபெற்ற யாழ் மாவட்ட ஏ பிரிவு அணிகளுக்கிடையிலான கரப்பந்தாட்டப் போட்டியில் ஆவரங்கால் மத்தி அணி சம்பியனாகியது.
இதன் இறுதியாட்டம் நேற்று மின்னொளியில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் ஆவரங்கால் மத்தி அணியை எதிர்த்து ஆவரங்கால் இந்து இளைஞர் அணி மோதியது. 5 செற்கள் கொண்ட போட்டியில் ஆவரங்கால் மத்தி அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 25:21, 26:24, 25:18 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சம்பியனாகியது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்