Sat. Apr 20th, 2024

அனைத்து ஊழியர்கள் சேவைக்கு அழைத்தாலும் தொற்று குறையவில்லை – ஜென்சன் றொனால்ட்

அனைத்து ஊழியர்களும் சேவைக்கு அழைக்கப்பட்டிருந்தாலும் கொரோனா தொற்றின் ஆபத்து குறைந்துவிடவில்லை என பருத்தித்துறை
பொதுசுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார்.
வருடப்பிறப்பின் முதல் வேலை நாளை சத்தியப்பிரமாணமேற்று பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றுகையில்,
பிரிட்டன் போன்ற மேலைநாடுகளில் பன்மடங்கு வேகத்தினல் கொரோனா வைரசின் ஒமிகுறோன் பிறழ்வு பரவிவருவதோடு எமது நாட்டிலும் பலர் இத்தொற்றுள்ளவர்களாக இனங்காணப்பட்டு வருகின்றனர்.
 நாமும் விழிப்படைந்து சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை சரியாக பேணாதவிடத்து சமாளிக்க முடியாத பாதிப்புக்கு முகங்கொடுக்க வேண்டிவரும். எனவே அனைவரும் எந்தவேளையிலும் மூக்கு வாயை மூடி முகக்கவசங்களை அணிதல், கைகளை அடிக்கடி சுத்தமாக்குதல், தனிநபர்களிடையே மூன்றடிக்கு குறையாத இடைவெளியைப் பேணுதல், மற்றும் நோயறிகுறிகள் தோன்றும்போது சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுதல் என்பன தொடர்ந்து பேணப்பட வேண்டும்.
எல்லாவற்றிற்கும்மேலாக பூஸ்ரர் தடுப்பூசியை எல்லோரும் பெற்றுக்கொள்வதோடு மற்றையவர்களையும் பெறுமாறு தூண்டுதல் வேண்டும்.
பெறுமதிமிக்க அரசசேவையை பொதுமக்களுக்கு தரமான விதத்தில் வழங்குவதற்கு நாம் யாவரும் எம்மையும் சமூகத்தையும் பாதுகாத்து செயற்படுவோம் எனவும். குறிப்பிட்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்