அனுமதியற்ற முறையில் டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றியவர் கைது

அனுமதியற்ற முறையில் டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றியவரை பருத்தித்துறை பொலீஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று புதன்கிழமை வல்லிபுர ஆழ்வார் வீதியில் அமைந்துள்ள காவலரண் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மருதங்கேணி பகுதியில் இருந்து அனுமதியற்ற முறையில் டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றி வல்லிபுர கோயில் வீதியூடாக பயணித்த போது, குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட்ட பொலீஸாரால் சோதனையிட்டு சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.