Sat. Feb 15th, 2025

அனந்தி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் சங்கமித்தார்!! -உத்தியோக அறிவிப்பு சற்று முன் வெளியீடு-

அனந்தி சசிதரனினால் உருவாக்கப்பட்ட ஈழத்தமிழர் சுயாட்சி கழகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு அங்கமான ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்துடன் கொள்கை அடிப்படையில் இணைந்து செயற்படப் போவதாக் ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின செயலாளர் திருமதி அனந்திர சசிதரன் இன்று யாழ்ப்பாணத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்படி அறிவிப்பினை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அனந்திர சசிதரன் மேலும் தெரிவிக்கையில்:-

வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்துவந்த தாம் மலையக மக்களின் பிரச்சினைகளுக்காக ஐ.நாவில் குரல் கொடுக்க தீர்மானித்துள்ளேன்.

இதற்காக நான் மலையகத்தை சேர்ந்த மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கொள்ளை அடிப்படையில் இணைந்து பயணிக்க தீர்மானித்துள்ளேன்.

இதன் ஊடாக மலையக மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சினைகளை ஐ.நாவில் மலையக மக்கள் சார்பில் பேசவுள்ளேன் என்றார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்