Sun. Apr 12th, 2026

அதிபர் ஆசிரியர் சுகயீன லீவு போராட்டம் நாளையும் தொடரும்

இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் கொழுப்பில் நடாத்தப்பட்ட போராட்டத்தில் ஆசிரியர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நாளை வியாழக்கிழமையும் சுகயீன லீவு போராட்டம் தொடரவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற அதிபர், ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டிய சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை வழங்காது, தமக்கு கிடைக்க வேண்டியதை கேட்கும் அதிபர், ஆசிரியர்களின் ஜனநாயகரீதியான  போராட்டத்தை நசுக்க, நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி, அதிபர், ஆசிரியர்கள் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்கள்  நடாத்திய ரணில்- ராஜபக்ஸ அரசாங்கத்தின்  அடக்குமுறையைக் கண்டித்து நாளை 27 ம் திகதியும் அதிபர், ஆசிரியர்களின் சகயீன விடுமுறைப் போராட்டம் தொடரவுள்ளது. இத்தாக்குதலில் இரு ஆசிரியர்கள் கண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதனால் நாளையும் இப்போராட்டம் தொடரவுள்ளது. அத்துடன்
அதிபர்கள் ஆசிரியர்கள் மீதான அடக்குமுறைகளைக் கண்டிக்கும் விதமாக இன்றைய தினம் போல் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் நாளைய தினமும் ஆதரவு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed