அதிபர் ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டம் எதிர்வரும் 26, 27 ஆம் திகதிகளில்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்வரும் 26 ஆம் 27 ஆம் திகதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் . அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்ஹ இதனை தெரிவித்தார் . சம்பள பிரச்சினை மற்றும் கற்பிக்கும் காலத்தில் சுதந்திரத்திற்கு ஏற்படுகின்ற இடையூறுகள் உள்ளிட்ட பலதரப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க போராட்டம் இடம்பெறவுள்ளதாக மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.