Sat. Apr 20th, 2024

அதிபர், ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம் – ஜோசப் ஸ்டாலின்

ஜே.வி.பி. தலைமையிலான தொழிற்சங்கங்களின் பொறுப்பற்ற செயலாலேயே போராட்டம் கைவிடப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதனால் தற்காலிகமாக தொழிற்சங்கப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாகவு அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொழிற்சங்கங்கள் அனைத்தும் கோட்டபாய ராஜபக்ஷச பதவி விலக வேண்டும்,  காலிமுகத் திடலில் தாக்குதல் மேற்கொண்டோரை கைது செய்ய வேண்டும்,  எரிபொருள் விநியோகம் மற்றும் மின்சாரம் சீராக நடைபெற வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டன. போராட்டம் நடாத்திய குறிக்கோள்கள் எவையும் நிறைவேற்றப்படாமல் ஜே.வி.பி. தலைமையிலான தொழிற்சங்கங்கள் நேற்று ஒன்று கூடி தொழிற்சங்கப் போராட்டத்தை கைவிடுவதாக தீர்மானித்துள்ளனர். இதனால் ஒரு பகுயினர் வேலையில் ஈடுபட்டும் இன்னொரு பகுதியினர் வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டால் குழப்ப நிலை உருவாகியுள்ளது. இதனால் இலங்கை ஆசிரியர் சங்கமும் தற்காலிகமாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது அரசாங்கத்திற்கும், அதிகாரிகளுக்கும் அடிபணிந்து வேலை பார்க்கும் தொழிற்சங்கங்களாலேயே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிபர் ஆசிரியர்கள் நாளை வெள்ளிக்கிழமை முதல் அனைவரும் தமது கடமையில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்