அதிகாலை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் பலி பணம் கொள்ளையடிப்பு

பொல்கஹவெல பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 27 வயதான ஊழியர் உயிரிழப்பு பணத்தை கொள்ளையடித்து சென்றதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை பொல்கஹவெல பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்திற்கு மோட்டார் சையிக்கிளில் வந்த சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பணத்தையும் கொள்ளையடித்து சென்றதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.