அதிகாலை கோர விபத்து!! -பொலிஸ் உத்தியோகஸ்தர் சாவு-

உதுவந்கந்த பகுதி கண்டி – கொழும்பு வீதியில் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ உத்தியோகத்தர் ஒருவர் சாவடைந்துள்ளார்.
கண்டி கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த பாரவூர்த்தி ஒன்றும் மாவனல்லை பொலிஸ் நிலையத்திற்கு பொறுப்பான சிற்றூந்து ஒன்றும் மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 03 பேர் காயமடைந்ததனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர் சாவடைந்துள்ளார்.
கடுகன்னாவை சேர்ந்த 47 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு சாவடைந்தவர் ஆவார்.