அதிகரிக்கும் ஆட்டோ விபத்துகள் ,களுத்துறை-பண்டராகம பிரதான வீதி விபத்தில் 4 பேர் பலி
களுத்துறை-பண்டராகம பிரதான வீதியில் உள்ள மொரோந்துடுவ சந்தியில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் இன்று (03) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது . மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற´ முச்சக்கர வண்டி, எதிர் திசையில் இருந்து வந்த டிப்பர் லாரி மீது மோதியதனால் இந்த விபத்து ஏற்பட்டது
இந்த விபத்து இடம்பெற்ற பகுதியில் இருந்த ஒரு சைக்கிள் ஓட்டுநரும் (65) இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டியின் உள்ளே இருந்த மூன்று பேரும் படுகாயமடைந்த நிலையில் பின்னர் உயிரிழந்துள்ளார்கள் . இவர்கள் 29-35 வயதுக்குட்பட்ட நபர்கள் என்று போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன
டிப்பர் டிரக்கின் டிரைவர் கைது செய்யப்பட்டு, அவரை நாளை (04) பாணந்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.