Sun. Nov 3rd, 2024

அண்ணன், தப்பி இடையில் சண்டை..! விலக்கு பிடிக்க சென்ற அம்மம்மா பாிதாபகரமாக உயிாிழந்தாா். 16 வயது சிறுவன் கைது..

அண்ணன் தப்பிக்கிடையில் நடந்த சண்டையின் நடுவில் விலக்கு பிடிக்க சென்ற அம்மம்மா கத்தி குத்துக்கு இலக்கான நிலையில் உயிாிழந்துள்ளாா். இந்த சம்பவம் முள்ளியான் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றிருக்கின்றது.

நேற்றய தினம் இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அதே பகுதியை சு.கங்கேஸ்வாி (வயது72) என்பவா் உயிாிழந்துள்ளாா். இதேவேளை கத்தியால் குத்திய 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

வீட்டில் மூத்த சகோதரரும் இளைய சகோதரனுக்கும் இடையே மோதல் இடம்பெற்றது. அதனைத் தடுப்பதற்கு அவர்களது அம்மம்மா முயற்சித்துள்ளார். அப்போது மூத்த சகோதரனுக்கு கத்தியால் குத்துவதற்கு

இளைய சகோதரன் முயன்ற போது கத்தி அம்மம்மாவின் நெஞ்சில் பாய்ந்தது. அம்மம்மாவுக்கு கத்தியால் குத்தியதையடுத்து பதற்றமடைந்த சகோதரர்கள் அவரை உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.

எனினும் அவரின் உயிர் வழியில் பிரிந்தது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் 16 வயதுடைய சுபாஷ் சசிகரன் என்ற மாணவனைக் கைது செய்தனர். மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்