அணு ஆயுதம் உள்ளது என பாக்கிஸ்தான் எச்சரிக்கை

மோடியுடன் ஒருபோதும் நாங்கள் போரை ஆரம்பிக்கமாட்டோம் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை லாகூர் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இம்ரான்கான் மேலும் கூறியுள்ளதாவது, “எந்த பிரச்சினைக்கும் போர் ஒரு முடிவு இல்லை என்பதை இந்தியாவுக்கு நான் கூற விரும்புகிறேன்.
போரில் வெற்றி பெறுபவர் கூட ஒரு தோல்வியாளர்தான். ஏனெனில் புதிய பிரச்சினைகளுக்கு போர் வழிவகுக்கும்
இதனால்இந்தியாவுடன் ஒருபோதும் நாங்கள் போரை தொடங்கமாட்டோம். இரு நாடுகளும் அணு ஆயுதங்களை கொண்டிருக்கின்றன.
பதற்றம் அதிகரித்தால் உலகம் ஆபத்தை எதிர்கொள்ளும்” என குறிப்பிட்டுள்ளார்..