அட்லீ – விஜய் கூட்டணி “பிகில்” ஹெற்றிக் சாதனை படைக்குமா?
அட்லீ இயக்கத்தில் விஜய் தெறி மற்றும் மெர்சல் திரைப்படங்கள் மெகா ஹிட் வெற்றியை கொடுத்தது. இவர்கள் இருவரும் பிகில் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். இவர்களின் கூட்டணியில் மெகா ஹிட் திரைப்படமாக்க வேண்டும் என்ற முயற்சியில் இருவரும் கடுமையாக உழைக்கின்றனர். ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்க ஜி.கே.விஸ்ணு மற்றும் படத்தொகுப்பாளர் ரூபனின் தொழில்நுட்பத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகவுள்ளது பிகில்.
விளையாடும் பட்டாளங்கள்
பிகில் திரைப்படம் கால்பந்தாட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகி வருகின்றது.
இதில் நயன்தாரா, யோகிபாபு, விவேக், ஆத்மீகா, ஆனந்தராஜ், டானியல் பாலாஜி, சாய் தீனா, ஜாக்கி ஸ்ரொப், கதிர், அம்ரித்தா ஐயர் என பல திரைப்பட நடிகர்கள் பட்டாளமே நடிக்கின்றனர்.