Mon. Feb 10th, 2025

அடுத்த சில நாட்களுக்குள் தேசிய ஜனநாயக முன்னணி உருவாக்கப்படும்-சஜித் பிரேமதாச

அடுத்த சில நாட்களுக்குள் தேசிய ஜனநாயக முன்னணி உருவாக்கப்படும், அதே நேரத்தில் அதன் வேட்பாளர் தொடர்பான பிரச்சினைகளும் விரைவில் தீர்க்கப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று தெரிவித்தார்.

நேற்று மாலை அலரி மாளிகையில் தேசிய ஜனநாயக முன்னணியின் தலைவர்களுடனான கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். அடுத்த சில நாட்களுக்குள் கூட்டணி உருவாகும் என்றும், அந்த நேரத்தில் வேட்பாளரும் அறிவிக்கப்படுவார் என்றும் கூறினார்.
இருந்தபோதிலும் , கூட்டணி உருவாகும் ஒரு சரியான தேதியை தன்னால் கூற முடியாது என்றும் அவர் கூறினார்.

“எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை, ஐக்கிய தேசிய கட்சிக்குள் மத்தியில் எந்த பிளவுகளும் இல்லை, அனைவரும் ஒன்றிணைந்து புதிய கூட்டணியை உருவாக்கி வேட்பாளரையும் தேர்வு செய்வார்கள்,” என்று அவர் கூறினார்.
இரண்டு அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்களுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி முடிவு செய்த ஒழுங்கு விசாரணை குறித்து கேட்டதற்கு, அந்த பிரச்சினை ஒரு அற்பத்தனமாது என்றும் விரைவில் அதற்கு தீர்வு காணப்படும் என்றும் கூறினார்.

இந்த கூட்டத்தின் கருத்து தெரிவித்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரான அமைச்சர் மனோ கணேசன் சரியான நேரத்தில் கூட்டணி உருவாகும் என்று தெரிவித்தார். “எதிர்க்கட்சி தங்கள் வேட்பாளர்களுக்கு பெயரிட்டதால் நாங்கள் விஷயங்களை அவசரப்படுத்தவும் வேட்பாளரை பெயரிடவும் தேவையில்லை” என்று அவர் கூறினார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்