அடுத்த ஆண்டு தொடக்கத்திற்கு போகும் உயர்தர மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகள்
உயர்தர மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நடத்துவது தொடர்பான புதிய திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கல்வி சீர்திருத்தம், திறந்தபல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூர கற்றல் ஊக்குவிப்பு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்தார்.
கல்வி அமைச்சுக்கும் பரீட்ச்சை திணைக்களத்துக்கும் இடையிலான கலந்துரையாடலை தொடர்ந்து இரண்டு பரீட்ச்சைகளுக்கான புதிய திகதிகள் அறிவிக்கப்படும் என்று அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இரண்டு தேர்வுகளும் அடுத்த ஆண்டு தொடக்கத்திற்கு ஒத்திவைக்கப்படும் என்று கூறினார்.