அடுத்த ஆட்டம் ஆரம்பம்..பொது வேட்பளராக அனுரா திஸ்ஸநாயக மாஸ்டர் பிளான் போடும் ரணில்
ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பளராக ஜேவிபி யின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரா குமார திஸ்ஸநாயக நியமிக்கப்படவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருதுவதாக தகவல்கள் வெளிவருகின்றன. இதனை ஐக்கிய தேசிய கட்சி ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.
பிரதமரின் கருத்துப்படி, 2015 ஆம் ஆண்டு ஒன்றிணைந்த அனைவரும் திரும்பவும் ராஜபக்சக்களை தோற்கடிப்பதற்காக ஒன்றிணையவேண்டும் என்றும் , இதனால் பொது வேட்பளராக அனுரா குமார திஸ்ஸநாயகவே பொருத்தமானவர் என்று அவர் கருதுவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன..
நேற்றைய தினம் பாரிய மக்கள் கூட்டம் ஒன்றை ஜேவிபி காலி முகத்திடலில் ஏற்பாடு செய்து ஜனாதிபதி வேட்பாளரை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது